திரிஷா தனது மீண்டும் ரீஎன்ட்ரியால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். சமீப காலமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. கமல் மற்றும் சிம்புவுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்ததும் பெரும் கவனத்தை பெற்றது.
தற்போது 22 வயது வித்தியாசம் உள்ள வெங்கடேஷுடன் நான்காவது முறையாக ஜோடி சேர இருக்கிறார். வெங்கடேஷ் (64) மற்றும் திரிஷா (42) இதற்கு முன் வெங்கடேஷ் உடன் ‘நமோ வெங்கடேசா’, ‘ஆடவாரி மட்டாலுக்கு அர்தாலே வேறுலே’, ‘வர்ஷம்’ போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.
இந்த புதிய திரைப்படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க, சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. நிதி அகர்வால் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். 2025 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படம் குடும்பம் நோக்கி உருவாகும் பொழுதுபோக்கு திரைப்படம். தற்போது திரிஷா, சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்திலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் பிஸியாக இருக்கிறார்.






